JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் உள்ள சுயநிதி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 85,000 ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கல்லூரிகளுக்கான கல்வி கட்டணத்தை, தமிழ்நாடு பொறியியல் கல்லூரி கட்டண நிர்ணயக்குழு முடிவு செய்கிறது.
அந்த வகையில் கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 40 பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரக்கூடிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்துள்ளது.
அதன்படி, தற்போது 85,000 ரூபாயாக உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் இனி மேல் 1,40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 40 தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்து. இதனையடுத்து, அடுத்தகட்டமாக அனைத்து கல்லூரிகளிலும் விரிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை அதிகமாக வசூல் செய்து வருவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய மாணவர்களை மிகவும் பாதிக்கும் என்று பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment