Monday, December 28, 2020

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரபூர்வ அறிவிப்பு.!



 
நடப்பாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பது உறுதி என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கலந்து பேசி பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும், பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். நிச்சயமாக இந்த கல்வியாண்டு பூஜ்யம் கல்வியாண்டாக இருக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கல்வி தொலைக்காட்சியில், திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் இருந்தது தொடர்பான விவகாரத்தில் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய இயலாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News