Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 25, 2020

அரசு ஊழியர்கள் போராட்டம் மீண்டும் வெடிக்கிறது !!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்டுத்த வேண்டும் இல்லையெனில், சிறை நிறப்பும் போராட்டம் நடத்த உள்ளதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது,

இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொது செயலர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜாக்டோ -ஜியோ அமைப்பு காலவறையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தியது.

இதனால், ஜாக்டோ -ஜியோ நிர்வாகிகள் மீது சுமார் 5, 068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுவரை அந்த வழக்குகள் வாபஸ் பெறவில்லை. ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் ஓய்வு பெற்ற ஊழியர்கள் யாரும் ஓய்வூதியத்தை பெற முடியவில்லை. பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. மேலும், கொரோனா காரணமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ள ஊதியத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்றார்.

மேலும், வரும் 2021 -ம் ஆண்டு ஜனவரி 5 -ம் தேதி முதல் 7 -ம் தேதி வரை இது தொடர்பாக பிரச்சார கூட்டங்கள் நடத்துவோம் என்றும், ஜனவரி 19 -ம் தேதி மற்றும் 20 -ம் தேதிகளில் மண்டலங்கள் தோறும் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும், ஜனவரி 27-ம் தேதி மாநில அளவிலான மாநாடு நடத்தவும், சிறை நிறப்பும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment