Search This Blog

Thursday, December 24, 2020

ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு!

0 comments
அண்ணா பல்கலை.யில் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு ஜனவரியில் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதனடிப்படையில் இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். இதில் ஐஐடி வளாகத்தில் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு கல்லூரிகளில் மாணவ , மாணவியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேசமயம் இளநிலை, முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதை யுஜிசி ஏற்காத நிலையில் ஆன்லைனில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வு ஜனவரியில் ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தில் தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment