Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, December 25, 2020

NTSE - தேசிய திறனாய்வு தேர்வு - தள்ளிவைக்க கோரிக்கை

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு மாணவர்களை நேரில் வரவழைத்து தேர்வு நடத்தப்படுவதால் கொரோனோ பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளி படிப்பு முதல், ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான NTS எனப்படும் தேசிய திறனாய்வு போட்டித் தேர்வு வரும் 27-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 900 மையங்களில் நடைபெறுகிறது. தற்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்பதால் கொரோனோ பேரிடர் காலத்தில் நோய் தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க முடியுமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய , மாநில அரசு சார்பில் NTS உதவித்தொகை வழங்கப்படுகின்றது. அந்த வகையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. முதலில் மாநில அளவில் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு பெறுபவர்களுக்கு 2ம் கட்ட தேர்வும் நடத்தப்படுகிறது. அதனைத்தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12ம் வகுப்பு வரை ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையும், அதன்பிறகு பட்டப் படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை உதவித்தொகையினை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த கல்வி உதவித்தொகைக்கான முதல்கட்ட தேர்வு வரும் 27-ஆம் தேதி தமிழகத்தில் 900 மையங்களில் நடைபெறுகின்றன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர். பள்ளி மாணவர்கள் அதிகளவில் பங்கேற்கும் தேர்வு என்பதால், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 27ஆம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒரு தேர்வும், 11: 30 மணி முதல் பகல் 1: 30 மணி வரை ஒரு தேர்வும் நடைபெற இருக்கிறது. தலா 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இந்தத் தேர்வு சரியான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் வகையில் நடத்தப்படுகிறது .

ஒரு வகுப்பறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனினும் தேர்வு மையத்தில் அதிகமான மாணவர்கள் கூடுவதால் தொற்று ஏற்படும் என அச்சம் ஏற்ப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment