Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 12, 2021

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 20ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு ..

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10, 12ம் வகுப்புகளுக்கு முதற்கட்டமாக வகுப்புகளை துவக்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதையடுத்து பொங்கலுக்கு பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் தமிழக அரசு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் விருப்பம் கேட்டறியப்பட்டது. தற்போது அரசின் பரிசீலனையில் நிறைவடைந்திருக்கிறது.

இந்நிலையில் வருகின்ற 20ம் தேதி முதல் பள்ளிகளை 10,12ம் வகுப்புகளுக்காக துவங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகங்கள் அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் வெளியூர்களில் இருக்கும் பட்சத்தில் வருகின்ற 19ம் தேதிக்குள் சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைத்துவிட்டதால் அனைத்து கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டன. இதுவரை பள்ளிகள் மட்டுமே திறக்கப்படாமல் உள்ளது. அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜன. 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment