Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 31, 2021

வாகன ஓட்டிகளுக்கு இறுதி எச்சரிக்கை.. மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் !



இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதாலேயே நடக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அரசு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்படும் என போக்குவரத்துத் துறைச் செயலாளர் அசோக்குமார் எச்சரித்துள்ளார்.

மேலும் காரில் சீட் பெல்ட் அணியாததற்கு ரூ.1000, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய், உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம், சிக்னல் ஜம்பிங் ரூ.1000 அபராதம் அல்லது ஓராண்டுக்கு குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இனி வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த விதி முறைகளைப் பின்பற்றிதான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment