Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 8, 2021

பொங்கலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு? கருத்துக் கேட்பில் பெற்றோர் ஆதரவு

தமிழகத்தில் 2020-21-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வந்துவிட்டது. அதனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து அந்தந்த மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான அறிவிப்பை ஜனவரி 4-ம் தேதி வெளியிட்டது. மேலும், அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களிடம் ஜனவரி 8-ம் தேதிக்குள் கருத்துகளை கேட்டு சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசின் அறிவிப்புபடி, பள்ளிகள் 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து கருத்து கேட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 5,200-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள், 7,400-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று முதல் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி 6, 7 ஆகிய இரண்டு நாட்களாக அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களை அந்தந்த பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment