JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, January 8, 2021

பள்ளிகளை திறக்க வேண்டும் என 70% பெற்றோர் விருப்பம்!?

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும் என 70% பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டி இருப்பதால் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு திட்டமிட்டது.

இதனையடுத்து பெற்றோர்களை பள்ளிகளுக்கு நேரில் அழைத்து கருத்துகள் கேட்கப்பட்டன. நேரில் வர முடியாத பெற்றோர் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவித்தனர்.

இதில் 70% பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்புகளைவிட நேரில் பாடம் நடத்துவதே மாணவர்களுக்கு புரியும் என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். பொதுத்தேர்வுகள் நெருங்குவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை திறக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர்.

பெற்றோர் தெரிவித்த கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கையாக அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து துறை சார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து பள்ளி திறப்பு குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment