Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 10, 2021

3 கோடி முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி: ஜன.16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.

நாடு முழுவதும் ஜன.16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் இன்ஸ்ட்டிடியூட் தயாரித்து வருகிறது. கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நாடு முழுதும், கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. வரும் 13-ம் தேதியில் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே,கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போடும் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

நாடு முழுவதும் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முன்கள பணியாளர்களைத் தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். 50 வயதுக்கு மேற்பட்டோரை தொடர்ந்து இணை நோய்கள் உள்ள 50 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். முன்கள பணியாளர்கள் தவிர, மேலும், 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment