JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பட்டி யலில் 50 வயதுக்கு மேற்பட்டோரை சேர்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே வாக்குசாவடி கண்காணிப்பு உட்பட தோதல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர். இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர ஏற்கனவே பட்டியல் சமர்ப்பித்தவர்கள் அதில் விடுபட்ட அல்லது சேர்க்கப்பட்ட ஆசிரியர்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும். கரோனா தொற்று பரவலால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கக்கூடாது. அதேபோன்று ஆசிரியர்களின் புகைப்படம் , வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது . அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை தலைமையாசிரியர்கள் உறுதிசெய்து பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment