Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 27, 2021

9, 10, 12 ஆகிய வகுப்புகளை தொடர்ந்து 11-ம் வகுப்பிற்கும் பாடத்திட்டம் குறைப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆன்லைனில் தான் தற்போது பெரும்பாலான வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடியாக வகுப்பில் பாடங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு பதினொன்றாம் வகுப்பிற்கு வகுப்புகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடக்குறைப்பு செய்ததாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. அது மட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒன்பதாம் வகுப்புக்கும் பாடங்கள் குறைக்கப்பட்டது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது

இந்த நிலையில் தற்போது 9, 10, 12 ஆகிய வகுப்புகளை தொடர்ந்து 11ஆம் வகுப்புக்கும் 40 சதவீதம் பாடக்குறைப்பு என்று சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்பால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

2020-21ம் கல்வி ஆண்டிற்கு 11ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (தமிழ் வழி) வெளியீடு!!

2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு!

No comments:

Post a Comment