Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 27, 2021

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் முந்திரி

நம்முடைய இன்றைய நவீன உணவு முறைகளால் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. சிறுநீரகம் பாதிக்கபட்டால் அது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். தினமும் முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படும்.

முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ரோல் அதிகளவு உள்ளது. மேலும் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய நல்ல கொலஸ்டிராலை அதிரிக்க செய்கிறது.

இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லாருக்கும் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. ரத்த அழுத்தம் ஏற்பட தற்போதுள்ள வாழ்க்கை சுழலும் ஒரு காரணம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க முந்திரி உதவுகிறது. ஏனெனில் முந்திரியில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

No comments:

Post a Comment