Thamizhkadal WhatsApp Channel

பள்ளிகள் திறப்பு எப்போது? 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து நாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

பள்ளிகள் திறப்பு எப்போது? 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து நாளை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை . பொதுத்தேர்வு நடத்துதல், குறித்தும் கல்வித் துறை அதிகாரிகளுடன் நாளை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக நாளை (ஜனவரி 25) துறை சார்ந்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதன்மை செயலாளர் தீரஜ் குமார், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கையாக சமர்பிக்கப்படும். அவரது ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories