JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா நோய் தொற்று காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன இந்நிலையில் 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது ? மற்றும் கரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் 11 மணிக்கு ஆட்சியர்களுசன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்.
இதனைத்தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மதியம் மருத்துவ குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
பி.2 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி.
இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் மற்றும் அரசியல் விவகாரங்கள், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment