Breaking

Monday, January 25, 2021

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடப்பகுதி வெளியீடு

நடப்பு கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காணமாக, 2020-2021 கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 2021 ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. எனினும் பெற்றோர்களின் விருப்பத்தின் பேரிலேயே வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவக்கப்பட்டது.

இந்நிலையில், மற்ற வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்தொலைக் காட்சியில் நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையிலும், வல்லுனர் குழுவின் ஆலோசனையின் படி பாடத் திட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் ஒவ்வொருப் பிரிவிலும் குறைக்கப்பட்டுள்ளன. 

2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு!

அதனைத் தொடர்ந்து 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒவ்வொருப் பாடத்திலும் ஒரு குறிப்பிட்டப் பகுதி குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 50 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

No comments:

Post a Comment