Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 13, 2021

கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?

கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். 

விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். 

கருவிழிக்கும் விழித்திரைக்குமான இடைவெளி அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, நாம் பார்க்கும் பிம்பம் சரியாக விழித்திரையில் விழாது. 

கண்ணாடி அணிவதன் மூலம், கருவிழி வழியாகச் செல்லும் பிம்பமானது, சரியாக விழித்திரைக்குச் சென்றடைய உதவும். ஆனால், கண்ணின் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் கண்ணாடி குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யாது.

No comments:

Post a Comment