Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 13, 2021

"மற்ற வகுப்புகளுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஆய்வு செய்து பின் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் ஜனவரி 19 முதல் திறக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் என்றும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளிக்கு வரும் மாணவர்ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், முதல் கட்டமாக திறக்கப்படும் 10,12 ஆம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. விருப்பமுள்ள 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98% மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment