Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 26, 2021

நோய்த் தடுப்பில் அருகம்புல்லின் பங்கு

வயல் வரப்பு களிலும், வெட்ட வெளிகளிலும் காணப்படும் தாவரங்களில் அருகம்புல்லும் ஒன்று. அருகம்புல்லில் ஏராளமான பச்சையம் நிறைந்துள்ளது. இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் சாறு முதலிடம் வகிக்கிறது. அருகம்புல் காரத்தன்மை உடையது. இதில் உயிர்ச் சத்துகளும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. 

இது தளர்ச்சியை நீக்கி, உடலுக்கு வலிமையைத் தரவல்லது. உடலில் சேரும் நச்சுத்தன்மைகளை நீக்குகிறது. ரத்தத்தைப் பெருக்கி, ரத்தச்சோகை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களைத் தூண்டி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிகிறது. கல்லீரலில் கற்கள் உண்டாவதைத் தடுப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.பல் ஈறுகளில் ரத்தம் கசிவதைத் தடுத்து, பற்களை உறுதிப்படுத்துகிறது. பற்களை வெண்மையாக்குவதுடன், வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.

அதிகப்படியான உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மலச்சிக்கலை நீக்கி, உடல்நலத்தை மேம்படுத்துகிறது. தோல் நோய்க்கும், சேற்றுப்புண்ணுக்கும் அரிய மருந்து இந்த அருகம்புல். எல்லாவிதமான நச்சுக்கிருமிகளையும் நீக்கும் ஆற்றல் அருகம்புல்லுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர, மேற்சொன்ன எல்லா நோய்களும் குணமாகும். இதைக்குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகே மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment