JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொங்கலுக்குப் பின் பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்க நாளை முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், இணை இயக்குநர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணப்பன், பள்ளி வளாகங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்றும் அதற்கான ஆயத்தப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார்.
பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நாளை முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்வர் என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment