JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளிகள் திறந்த உடன் மாணவர்கள் அங்கே எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறந்த உடன் அங்கே மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறையானது அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி மாணவர்கள் தங்களுக்கான மதிய உணவு, குடிநீர் பாட்டிலை வீடுகளில் இருந்தே கொண்டு வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தாமல், Counseling தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் 18-ம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் வருகைப் பதிவுக்காக மாணவரை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்றும் பொதுத் தேர்வு குறித்த அச்சம் தேவையில்லை எனவும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment