Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 14, 2021

அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம்

அத்திபழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும், இதய ஆரோக்கியம் மேம்படும். சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்க பயன்படுகிறது. 1/2 காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.

புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் இந்த அத்திப்பழத்தில் அதிக அளவு உள்ளதால் நம் உடலானது புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்து உடலை புற்று நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மலச்சிக்கல் பாதிப்பை சரிசெய்யலாம். நீர் கடுப்பு, பித்தப்பை கல், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

No comments:

Post a Comment