Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 19, 2021

மாணவர்களே கவலை வேண்டாம்.. பழைய பாஸ் போதும்.. அமைச்சர் அறிவிப்பு...!!

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த 9 மாதங்களாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வைரஸின் தாக்கம் குறைந்து உள்ளதால் தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்பு நடைபெற ஆரம்பித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 11,600 பள்ளிகள் உள்ளன.

இதில் 10ஆம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களும் 12ஆம் வகுப்பில் 8 லட்சம் மாணவர்களும் உள்ளனர். தற்சமயம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கப்படும் நிலையில் தற்போது பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் பஸ் பாஸ் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது "10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க முடியும் எனவும் கண்டிப்பாக பள்ளி சீருடைகள் அணிந்து பேருந்தில் பயணிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment