Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 19, 2021

பள்ளிகள் இன்று திறப்பு: ஆசிரியர்களுக்கு அறிவுரை

பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளதை அடுத்து, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி மருந்து தெளித்து, சுத்தம் செய்யப்பட்டன.பத்து மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்காக, பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. 

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், வகுப்பறை மற்றும் வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.காரமடை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெள்ளி கூறியதாவது:தமிழக அரசு, ஒரு வகுப்பறையில், 25 மாணவர்கள் மட்டுமே உட்கார அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தகுந்தார் போல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 

வகுப்பறைகளில், கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. வளாகத்தை சுத்தம் செய்து, குளோரின் பவுடர் துாவப்பட்டது.மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களை இடைவெளி விட்டு உட்கார வைக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை, நுழைவு வாயிலில் 'தெர்மல் ஸ்கேனர்' வாயிலாக பரிசோதனை செய்த பின், பள்ளிக்குள் அனுமதிக்கப்படுவர். 

காய்ச்சல், சளி இருந்தால், உடனடியாக பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்படும்.இவ்வாறு, தலைமை ஆசிரியர் கூறினார்.

No comments:

Post a Comment