JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 15, 16, 17 -ம் தேதிகளில் சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் உள்ள நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவல் நோயை தடுக்கும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
தமிழக அரசின் நடவடிக்கை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. வரும் காணும் பொங்கல் அன்று கடற்கரையில் அளவுக்கு அதிகமான பொது மக்கள் கூட்டம் கூடுவது வழக்கம்.
எனவே, கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 15, 16, 17 -ம் தேதிகளில், அதாவது பொங்கல் விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரை, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் கூட அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment