JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், “ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ மற்றும் ஜியோ கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகிறது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்புகளை பிறப்பித்திருக்கிறது. இந்த குறிப்பாணைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 42 க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பணிக் காலம் முடிந்து விட்டது என்றாலும் அவர்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் பணி ஓய்வு பெற முடியவில்லை. இதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே அவர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment