Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 16, 2021

பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் - கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர்

பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தொடர்ந்து, தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலானது கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் கால்நடை சுகாதார ஆய்வு மைய இயக்குனர் தினகரராஜ் கூறுகையில், பறவை காய்ச்சல் கோழி, வாத்து மற்றும் பறவைகளுக்கு மட்டுமே பரவியுள்ளது. இந்த காய்ச்சல் இதுவரை மனிதர்களுக்கு பரவியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழகத்தில் இன்னும் பறவைகள் கண்டறியப்படாத நிலையில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கோழி, வாத்து இறைச்சிகள் மற்றும் அதன் முட்டைகளை நன்கு வேக வைத்த பின்புதான் சாப்பிட வேண்டும். 70 டிகிரியில் வேக வைக்கும் போது அதில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். பறவை காய்ச்சலின் தீவிரம் தணியும் வரை, பச்சை முட்டை மற்றும் ஆப்பாயில் போன்றவற்றை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment