Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 20, 2021

வாட்ஸ் அப்பில் புதிய வசதி !!

உலகத்திலேயே சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது வாட்ஸ் அப் தான். இந்தியாவில் இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. இந்நிலையில், வாட்ஸ் அப்பில் புதிய ரீடு லேட்டர் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். தகவல்கள், ஆவணங்கள், வீடியோ காலிங், பணப்பரிமாற்றம் என பல்வேறு நல்ல விஷயங்கள் இதில், உள்ளது. குறிப்பாக பிசினஸ் செய்பவர்கள் வாட்ஸ் அப்பை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் அதிக பொது மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்தச் செயலியை கடந்த 2014 -ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. பின்னர் வாட்ஸ் அப்பில் பல புதிய அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன அவை மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.

இந்நிலையில், வாட்ஸ் அப்-ல் தினமும் நண்பர்கள், உறவினர்கள், அலுவலகம் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஏராளமான தகவல்கள் வரும். அந்த வகையில், வாட்ஸ் அப்-ல் வந்த தகவல்களை படிக்காதவைகளை தனியாக சேகரிக்க முடியும். 

அர்ச்சீவ்ஸ் போல இந்த அம்சம் பயன்பட்டாலும், ஆர்கைஸில் நாம் சேகரித்து வைத்திருக்கும் நபரிடம் இருந்து தகவல்கள் வந்தால் காட்டிவிடும். இப்படி ஒரு புதிய அம்சம் பலரையும் வியக்கவைத்துள்ளது.

No comments:

Post a Comment