JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிப்பதற்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்குகளை பதிவு செய்ய நடவடிக்கை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்கசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டித்துரை தாக்கல் செய்த மனு ஒவ்வொரு தேர்தலின் போதும் 100 சதவீத வாக்குப்பதிவு பெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்குகளைப் பதிவு செய்கின்றனர்.
தபால் வாக்குப் பதிவு செய்ய படிவம் 12 பூர்த்தி செய்து உரிய படிவத்துடன் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் ஆனால் ஆனால் இந்த நடைமுறையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாது 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்குகள் 2 லட்சத்து 69 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
அதில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 628 விண்ணப்பங்கள் மட்டுமே மீண்டும் பெறப்பட்டன.
இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 54 வாக்குகள் மட்டுமே செலுத்தப்பட்டது மீதமுள்ளவர்கள் செலுத்த முயலாமல் போனது இதனால் தபால் வாக்குகள் நடைமுறைகளால் 100 சதவீத வாக்குகள் பதிவானது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை மின்னணு இயந்திரம் மூலமாக செலுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்ட மனுவில் விசாரித்த நீதிபதிகள் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment