தமிழகத்தில் பள்ளி மூடல்

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா உறுதியான மாணவருக்கு பள்ளியில் இருந்து தொற்று பரவவில்லை. ஊரில் இருக்கும் போது மாணவர் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார். பள்ளிக்கு வந்ததும் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் அப்பள்ளி மூடப்படுகிறது. பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்த பிறகு திங்கள் முதல் மீண்டும் பள்ளி திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories