JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, January 7, 2021

இன்ஜி., முதலாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு

 இன்ஜி., முதலாமாண்டு மாணவர்களுக்கு, பிப்., 26ம் தேதி முதல் செய்முறை தேர்வு துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இன்ஜி., கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'இன்ஜி., முழு நேர படிப்பில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு பிப்., 26ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் துவங்கும். மார்ச், 8ம் தேதியில் இருந்து செமஸ்டர் தியரி தேர்வுகள் நடக்கும்.

பகுதி நேர படிப்பில் சேர்ந்த பி.இ.,-பி.டெக்., மாணவர்களுக்கு, முதல் செமஸ்டருக்கான பாட வகுப்புகள் மார்ச், 3ம் தேதி முடிவடையும். செய்முறை தேர்வுகள் மார்ச், 5ம் தேதி துவங்கும். 

மார்ச், 15ம் தேதி முதல் தியரி தேர்வுகள் நடத்தப்படும். முழு நேரம் மற்றும் பகுதி நேரம் என, இரண்டு பிரிவு மாணவர்களுக்கும், இரண்டாம் செமஸ்டர் பருவத்துக்கான வகுப்புகள் ஏப்., 5ம் தேதி முதல் துவங்கும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment