Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 29, 2021

முளைகட்டிய வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!


சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியப் பொருள் வெந்தயம். உணவில் வெந்தயத்தைப் பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் சூட்டை தணிக்க, இதயத்தைப் பாதுகாக்க, உடலில் சர்க்கரை அளவைக் குறைக்க என பயன்கள் ஏராளம்.

எனினும் சமையலில் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதற்குப் பதிலாக முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட கூடுதல் பலன் கிடைக்கும். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் புரதச்சத்து, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துகள் அதிகளவில் கிடைக்கின்றன.

முளைக்கட்டுவது எப்படி?

வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்பின்னர் ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்திற்குப் பின்னர் அதனைப் பார்த்தால் நன்கு முளைகட்டியிருக்கும்.

வெந்தயத்தை நேரடியாக உணவுப்பொருளில் சேர்த்தால் கசப்பாக இருக்கும். ஆனால், முளைக்கட்டி சாப்பிட்டால் கசப்பு சுவையே தெரியாது.

பயன்கள்

► நீரழிவு நோயுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. 3 மாதங்கள் தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும். மேலும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும்.

► வயிற்றுப் போக்கு, வயிறு வலி, நீர்க்கடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும்.

► நரம்புகளைப் பலப்படுத்தும். கண்களுக்கு குளிர்ச்சி தரும்.

► சீதபேதி, மூலநோய் இவைகளை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது.

► முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு. வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம் அல்லது தலைமுடியை அலசுவதற்கு பயன்படுத்தலாம். வெந்தயத்தை அரைத்தும் தலைக்கு தேய்த்துக் குளிக்க முடி கருமையாக இருக்கும், வளரும்.

►முளைகட்டிய வெந்தயம் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் இதயக்கோளாறுகள் ஏற்படாது.

► இளம்பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது. தாய்மார்களுக்கு பால் சுரக்க முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடலாம். இளம்பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும்.

► வெந்தயத்தை முளைகட்டி சாப்பிட முடியாதவர்கள் அதை வறுத்து அரைத்து வெந்தயப் பொடியாக பால் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.

► வெந்தயம் அதிகம் குளிர்ச்சி என்பதை நினைவில்கொள்ள வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment