JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட (15.09.2010ல் பணியில் சேர்ந்தவர்கள்) ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021.என 2009-2010ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணிதம் , அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாட பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பார்வை -3 ல் காண் செயல்முறைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது . 2008-2009 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை ஏற்கனவே பார்வை -2 ல் காண் செயல்முறைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே , 2009-2010 ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தனியே பணிவரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும் , தற்காலிக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும் நியமனங்களுக்கும் , நீதிமன்ற வழக்குகள் மற்றும் வேறு சில நிர்வாகக் காரணங்களுக்காக வழங்கப்படும் நியமனங்களுக்கும் தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும்.
இச்செயல்முறைகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் , வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிவைப்பதோடு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்செயல்முறையினை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது

No comments:
Post a Comment