Friday, January 15, 2021

IFHRMS ல் PaySlip Download செய்யும் முறை - விரைவில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை !

விரைவில் நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. இது குறித்து தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய ஆசிரியர்களின் சங்க நிர்வாகி திரு.அ.சி.ஜெயபிரகாஷ் கூறியதாவது,

" IFHRMS இல் டவுன்லோடு செய்யும் e-payslip மிகவும் பயனுள்ளது. ஏனெனில் நாம் வங்கிகளில் கடன் வேண்டி விண்ணப்பிக்கும் போது நம்முடைய பணி சம்பந்தமான அனைத்து தகவல்களும் EPAYSLIP இல் உள்ள QR கோடு மூலம் உறுதி செய்து கொள்கின்றனர்.

மேலும் ஊதியம் வழங்கும் அலுவலரிடமிருந்து கையொப்பம் பெற வேண்டிய அவசியமில்லை என்று இந்த ஊதிய சீட்டிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆகவே இது அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒன்றாகும். இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர IFHRMS ல் PaySlip Download செய்யும் முறை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்று அவர் கூறினார் ..

No comments:

Post a Comment