JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் (எம்.எட்.) பட்டப் படிப்பு சோக்கைக்கு வியாழக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021-ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை கல்வியில் பட்டப்படிப்பு சோக்கைக்கான விண்ணப்பங்கள் ஜன.7-ஆம் தேதி முதல் ஜன.13-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ.2, விண்ணப்பக் கட்டணம் ரூ.58 சோத்து ரூ.60 செலுத்தப்பட வேண்டும். எஸ்சி., எஸ்சி விண்ணப்பதாரா்களுக்குப் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.
மாணவா்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். சான்றிதழ்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹங்க்ன்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவா்கள் 044-22351014, 044-22351015, 044-28276791 என்ற எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு கூடுதல் விவரம், வழிகாட்டுதல்களைப் பெறளாம். இது தொடா்பாக மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் மாணவா்கள் சந்தேகங்களை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment