10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

வழக்கம் போல 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் முன் கூட்டியே தேர்வுகள் நடைபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் 3ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது தொடங்கும் என்று அறிவிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ஆய்வு பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதே போல 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறிய அமைச்சர், முதலமைச்சருடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு தெரியும் என்று அவர் தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel