Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 24, 2021

சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும்: கல்வித்துறை செயலாளர் தகவல்..!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்படும் நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைப்பு குறித்த புதிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

தமிழகத்தில் 10 மாதங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொதுத்தேர்வு தேதி நெருங்கி வருவதால் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் திறக்கப்பட்டன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் நலன் கருதி பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் அந்த பாடங்களை தயார் செய்தாலே போதுமானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்போது வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் பெருமளவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 15ம் தேதிக்குள் பாடத் திட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவை முடிந்ததும் 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment