Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 8, 2021

கின்னஸ் சாதனை பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்கள்!

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியோர் இணைந்து இராமேஸ்வரத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் ஒரு செயற்கைகோள் தயாரிப்பு, விண்வெளித்துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆயிரம் மாணவர்களை கொண்டு 50 கிராமுக்கும் குறைவான எடையுள்ள மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டது.

முன்னதாக இவர்களுக்கு செயற்கைக்கோள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டதோடு ஒருநாள் நேரடி செயல்வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த செயற்கை கோள்கள் உதவியுடன் பூமியின் தட்ப வெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

இந்த குழுவில் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் செய்யது அகமது சமீர் என்ற மாணவன் தயாரித்த செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. அம்மாணவனுக்கு கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு,ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு என ஐந்து உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

உலக சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவனுக்கும், வழிகாட்டிய முகம்மதியா மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் முகைதீன் அப்துல் காதர், தமிழாசிரியர் செய்யது இப்ராகிம் ஆகியோருக்கும் முகம்மதியா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முகம்மதியா பள்ளிகளின் நிர்வாகக்குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

No comments:

Post a Comment