Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 6, 2021

பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் அச்சப்பட தேவையில்லை - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி எட்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

தமிழக கல்வித்துறை அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ள குறிப்பில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளியை திறந்து வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து அதிமுக அரசு வரலாறு படைத்து உள்ளதாக தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment