Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 17, 2021

குரூப் - 1 தேர்வர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உத்தரவு

குரூப் - 1 பிரதான தேர்வு எழுத உள்ளவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்' என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:'குரூப் - -1' பிரிவில் அடங்கிய பதவிகளுக்கு முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பிரதான தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

பிப். 16ம் தேதி முதல் மார்ச் 15க்குள் அரசு கேபிள் 'டிவி' நடத்தும் 'இ- - சேவை' மையங்கள் வழியே அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றம் செய்து இணைத்தால் மட்டுமே அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

பிரதான தேர்வுக்கு கட்டண விலக்கு கேட்காதவர்கள் தங்களின் தேர்வு கட்டணமாக 200 ரூபாயை மார்ச் 15க்கு முன் செலுத்த வேண்டும்.அதன்பிறகே தங்களின் சான்றிதழ்களை பதிவேற்ற முடியும்.டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களுக்கு பதிவேற்றாவிட்டால் பிரதான எழுத்து தேர்வில் பங்கேற்க விருப்பமில்லை எனக்கருதி விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment