Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 23, 2021

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம்

பிஹாரில் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான தார் கிஷோர் பிரசாத் நேற்று தாக்கல் செய்தார். இதில் திருமணமாகாத பெண்கள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் ரூ.25 ஆயிரமும் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மூடப்பட்ட சர்க்கரை ஆலைகள், 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவைக்கு வெளியிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment