Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 18, 2021

"+2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் "

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மே 3ம் தேதி மொழிப்பாடம், மே 5ம் தேதி ஆங்கிலம், மே 7ம் தேதி கணினி அறிவியல், மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், விலங்கியியல், மே 19ம் தேதி உயிரியியல், வரலாறு மே 21ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது’ எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment