SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
பொதுச் செய்திகள்
» 5,000 காலிப்பணியிடங்களை நிரப்ப சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை
5,000 காலிப்பணியிடங்களை நிரப்ப சாலை பணியாளர் சங்கம் கோரிக்கை
நெடுஞ்சாலைத்துறையில், காலியாக உள்ள, 5,000க்கும் மேற்பட்ட சாலை பணியாளர் இடங்களை நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க, மாநில தலைவர் சண்முகராஜா, சேலத்தில், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக நெடுஞ்சாலைத்துறையில், காலியாக உள்ள, 5,000க்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் இடங்களை நிரப்ப வேண்டும். 2002ல், 41 மாத பணி நீக்க காலத்தை, பணி காலமாக அறிவிக்க வேண்டும். சீருடை, சலவைப்படி, விபத்து படி, சைக்கிள் படி வழங்க வேண்டும். சாலை பணியாளர்களை, திறனில்லா ஊழியர்களாக அறிவித்து, தர ஊதியம் மாற்றி அமைத்து, நிலுவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, 15 ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம். தற்போது, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல, சேலம், கோட்டை மைதானத்தில், பிப்., 21ல், கோரிக்கை பேரணி, சிறப்பு மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க, முதல்வருக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






No comments:
Post a Comment