Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, February 10, 2021

6,7,8 ஆம் வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

🛑 தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுக் கிடந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் திறக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா வீரியம் அதிகமாக இருந்ததால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று, குறைந்து இருப்பதால் மாணவனின் நலன் கருதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.

🛑 அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

🛑 அதே சமயம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத் தேர்வில் மாணவர்களும் , பெற்றோர்களும் விரும்பும் வகையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

🛑 இந்நிலையில் தமிழகத்தில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6, 7 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது .

🛑 2020–21 ஆம் கல்வி ஆண்டிற்கான மூன்று பருவத்திற்கும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட பின்னரே 9 ,10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் விரைவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் அறிவிக்கும் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .

No comments:

Post a Comment