Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 4, 2021

9 , 11 ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு - கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

வகுப்பறை வசதிகள் , ஆசிரியர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகள் செயல்பட கீழ்க்கண்ட கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது .

அரசாணையில் வகுப்பறையில் கூடுதலாக இடவசதி இருப்பின் அதிக இருக்கையினை போட்டு சமுக இடைவெளியுடன் கூடுதலாக மாணவர்களை வகுப்பறையில் அமர செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சமூக இடைவெளியை பின்பற்ற போதிய வகுப்பு அறைகளும் ஆசிரியர்களும் இருப்பின் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அனைத்து வகுப்புகளும் ( 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ) முழுவேளையாக பள்ளி இயங்கலாம்.

சமூக இடைவெளியைப் பின்பற்றும்போது , மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக சில வகுப்பறைகள் மட்டும் தேவைப்படும்போது பள்ளியில் உள்ள ஆய்வகம் , நூலகம் , கூட்ட அரங்கம் போன்றவைகளை பயன்படுத்தி 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு முழு வேளையாக பள்ளிகள் செயல்படலாம் .

சமூக இடைவெளியைப் பின்பற்றும்போது , சில பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்குமானால் மாணவர்களை பெரியவகுப்பறை , கூட்ட அரங்கம் போன்ற இடங்களில் அமரவைத்து வகுப்புகளை நடத்தலாம் . சில பள்ளிகளில் வகுப்பு பிரிவுகளின் எண்ணிக்கை சமூக இடைவெளியைப் பின்பற்றுவதால் இரு மடங்கு ஆகும் என்பதால் கீழ்க்காணும் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றலாம் .

1 ) சில வகுப்புகள் / பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ( alternate days ) செயல்படலாம் .

2 ) பள்ளிகளில் சில வகுப்புகள் / பிரிவுகள் இரண்டு வேளைகளாக ( shift system ) செயல்படலாம் . அவ்வாறு செயல்படும்போது , காலை வகுப்புகள் முடிந்தவுடன் முறையாக கிருமி நாசினி கொண்டு வகுப்பறைகளை சுத்தம் செய்திடல் வேண்டும் . அதன் பிறகு மாலை வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் .

3 ) பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் தங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் , வகுப்பறைகள் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து மேலே தெரிவிக்கப்பட்டுள்ளபடி பள்ளிகளை செயல்படுத்த அனுமதிக்கப்படுகிறது .

4 ) எனவே பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் திறப்பதற்காக வெளியிட்டுள்ள பார்வை ( ரில் குறிப்பிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ள கோவிட் 19 தொடர்பான உடல்நலம் , சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 08.02.2021 அன்று அனைத்துவகை பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளை திறக்கும்போது செயல்படுத்திடவும் , மேலே பத்தி -2 ல் தெரிவித்துள்ள கூடுதல் வழிமுறைகளை செயல்படுத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு / முதல்வர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி முறையாக பள்ளிகள் செயல்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment