Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 8, 2021

பிரிட்ஜில் வைத்த இந்த உணவுகளை சூடாக்கி சாப்பிடாதீர்கள்!

சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து அவ்வப்போது எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது இக்காலத்தில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது நாகரிகமாக பார்க்கப்படுவதும் வேடிக்கையான ஒன்று. வேலைப்பளு, நவீன இயந்திரங்களின் பயன்பாட்டினால் இந்த வழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது உடல்நலத்திற்கு எந்த அளவுக்கு தீங்கு விளைவிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

உணவுகளை வீணாக்காமல் பயன்படுத்துகிறோம், பிரிட்ஜில் வைத்தாலும் அதனை திருப்பி எடுத்து சூடாக்கித் தானே உண்கிறோம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், எந்த ஒரு பொருளையுமே பிரிட்ஜில் வைத்து எடுத்து சமைப்பது அல்லது சூடாக்குவது உடலுக்கு நல்லதல்ல என்பதே உண்மை.

அதிலும் குறிப்பாக, கீழ்குறிப்பிட்ட இந்த பொருள்களை சூடாக்கி சாப்பிடக்கூடாது. நைட்ரஜன் நிறைந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து சூடாக்கும்போது அது விஷயமாக மாறி உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிறது.

அந்தவகையில், கீரை வகைகள், கேரட், முள்ளங்கி, மஷ்ரூம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகள் ஆகியவற்றை சூடாக்கி சாப்பிடக்கூடாது.

அதேபோன்று இறைச்சியை ஒருபோதும் பிரிட்ஜில் வைத்து எடுத்து சமைக்கக் கூடாது. சிக்கன், மீன் போன்றவற்றை வாங்கியவுடன் சமைத்துவிடுவது நல்லது.

பெரும்பாலான கடைகளில் இறைச்சிகளை பிரிட்ஜில் வைத்து சமைப்பதால்தான் ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், முட்டையையும் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக்கூடாது.

No comments:

Post a Comment