சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கல்லூரிகள், பள்ளிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பள்ளிகளில் 10 மற்றும் 12 மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வர அரசு அனுமதி வழங்கியது.
கடந்த டிசம்பர் மாதம் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, வருகின்ற 8-ம் தேதி முதல் இளநிலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் ஜூன் மாதத்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங்கும் என சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது. பாடங்களில் சந்தேகம் இருந்தால் பல்கலைக்கழகத்திற்கே நேரடியாக வந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வரும் 8-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கும், அடுத்தடுத்த மாதங்களில் பிற ஆண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
Home »
பொதுச் செய்திகள்
» ஜூன் மாதத்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள்...சென்னை பல்கலை. அறிவிப்பு.!






No comments:
Post a Comment