JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பொதுத்தேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜன.19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறைக்கப்பட்ட சிலபஸ் (பாடத்திட்டம்) வெளியிடப்பட்டதால் கற்பித்தல் பணிகள் விறு விறுப்பாக நடக்கின்றன.
அதே சமயம் கிராமப்புறங்களில் வருகைப்பதிவு இல்லாததால் மாணவர்களை ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புலம்புகின்றனர். ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டாலும், பள்ளிக்கு வந்தால் தான் கணிதம், செய்முறை சார்ந்த பாடங்களை கற்பிக்க முடியும். குறிப்பிட்ட காலத்திற்குள் சிலபஸ் முடிப்பதும் குதிரை கொம்பாகிவிடும்.
குறைக்கப்பட்ட சிலபஸ் அடிப்படையில் தவிர்க்க வேண்டிய பகுதிகளை மாணவர்களுக்கு புரிய வைக்கவே அதிக நாட்களாகி விட்டது. அதே சமயம் தனியார் புத்தக நிறுவனங்கள், கல்வி இணையதளங்கள் குறைக்கப்பட்ட சிலபஸ்சுக்கு ஏற்ப 'வினா-வங்கி' தயாரித்து வெளியிடுகின்றன.
இதே போல் பாடத்திட்ட தயாரிப்பு குழுவின் ஒத்துழைப்போடு 'மினிமம் மெட்டீரியல்' தயாரித்து வழங்கினால் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் சிரமம் இருக்காது. பெற்றோர் ஆசிரியர் கழகமே 'மினிமம் மெட்டீரியல்' தயாரித்து வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment