Sunday, February 28, 2021

மனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

விதம் விதமான சமையலில் புதினா உணவு உலக அளவில் பிரசித்தம். புதினாவை வாசனை திரவியமாக பார்க்கிறோம். புதினா பசியைத் தூண்டக்கூடிய இயற்கையான அருமருந்து. புதினா வாதத்தைக் கட்டுக்குள் வைக்கும், வயிற்றில் உண்டாகும் வாயுவைக் குறைக்கக் கூடிய அருமையான மருந்து.

புதினா, வயிற்றின் அமிலத்தன்மையை குறைத்து காரத்தன்மையை அதிகப்படுத்தும். மருந்தாக பயன்படுத்தினால் புதினா சாறு 30 மிலி அளவுக்கு அல்லது விழுது எடுத்து கொட்டைப்பாக்கு அளவு மருந்தாக பயன்படுத்தலாம்.மனம், செரிமானம் சம்பந்தப்பட்ட நல்ல விஷயங்களுக்காகவும், மனதில் மகிழ்ச்சியை தூண்டக்கூடிய மூலிகையாகவும், புதினா இருக்கிறது. புதினாவால் ஏற்படும் பயன்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று விவரிக்கிறார்  வர்மா ஆயுர்வேத மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S

ஐயையோ... வாய் துர்நாற்றம்!

நிறைய இளைஞர்கள் நல்ல பதவியில் இருப்பார்கள். ஆனால் வாய் துர்நாற்ற பிரச்னையால் அவதிப்படுவார்கள். ஒரு மீட்டிங்கில் பேசினால் கூட கேலி செய்கிறார்கள். இதை போக்க என்ன வழி என்று கேட்பார்கள். அவர்களுக்கு ஒரு 10 புதினா இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடித்து விடுங்கள்.இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வாய் துர்நாற்றம் மறைந்து போய்விடுமென்று சொல்லி, அவர்களும் அதை செய்து பலன் அடைந்ததாக கூறுவார்கள்.

தினம்தோறும் புதினா!

வயிறு எரிச்சல் என்று ஹைப்பர் அசிடிட்டி மாத்திரைகள் சாப்பிட்டு வருவார்கள். இவர்கள் சாப்பிடும் மாத்திரைகளில் பாண்டஸிட் மாத்திரை சிறுநீரக செயல் இழப்புக்கு வழி வகுத்துவிடும். வலி மாத்திரை மட்டும்தான் இவ்வாறு செய்யுமென்று நினைப்பார்கள். அப்படி இல்லை. இந்த பாண்டஸிட் மாத்திரை சிறுநீரகத்தை செயல் இழக்கவும் வைத்துவிடும். வயிற்று எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் 100 மிலி புதினா சாற்றை எந்த நேரத்திலும் தினம் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் தெரியும். பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றில் அமிலம் சுரந்து புளிப்பு சுவையுடன் நெஞ்சு கரிப்பது சரியாகும்.

இளமை ஊஞ்சலாடும்

பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி, ஒற்றைத் தலைவலியுடன் ஏற்படும் கடுமையான வாந்தி ஏற்படும். இதற்கு புதினா சாற்றை மாதவிலக்கு காலங்களில் தொடர்ந்து பருகி வந்தால் உடனே தலைவலி, வயிற்றுவலி, வாந்தி நிற்கும். இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் புதினா சாற்றை தினம் ஒருவேளை பருகி வந்தால் இளமை ஊஞ்சலாடும்.

புதினா அற்புதங்கள்

புதினா, மருத்துவ மூலிகையாகும். நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்.

*புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ப்பொருள், உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோபிளேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறாது.

*அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும்.

*ரத்தத்தை சுத்திகரிக்கும்.

*வாயு தொல்லையை நீக்கி வயிற்று புழுக்களை அழிக்கும்.

*புதினாவை நீர் விடாமல் அரைத்து பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.

*மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்தது.

*முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

*புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.
நன்றி குங்குமம் தோழி
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

கல்விச் செய்திகள்

Featured News