Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 4, 2021

மத்திய அரசு வேலைவாய்ப்பு _ முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

முதுநிலைப் பட்டதாரிகளுக்கு ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி இந்திய ரிசர்வ் வங்கியில் 322 இடங்கள் காலியாக உள்ளன . முதுநிலைப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 

பணியிடங்கள் விவரம் : 1.Officers in Gr.B ( DR ) - General : 270 இடங்கள் . 

சம்பளம் : 35 , 150-62,400 . 

வயது வரம்பு : 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30 க்குள் . 

தகுதி : முதுகலை பட்டப்படிப்பில் ( டெக்னிக்கல் ) 60 % மதிப்பெண்களுடன் ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு 50 % மதிப்பெண்கள் ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 2. Officersin Gr.B ( DR ) -DEPR : 29 இடங்கள் . 

சம்பளம் : < 35,150 62,400 . 

வயது வரம்பு : 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30 க்குள் . 

தகுதி : Economics / Econometrics / Quantitative Economics / Mathematical Economics / Integrated Economics / Finance ஆகிய பாடங்களில் 55 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டப்படிப்பில் ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு 50 % மதிப்பெண்கள் ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . 3. Officers in Gr.B ( DR ) - DSM : 23 இடங்கள் . 

சம்பளம் : < 35,150-62,400 . 

வயது வரம்பு : 1.1.2021 தேதியின்படி 21 முதல் 30 க்குள் . 

 தகுதி : Statistics / Mathematical Statistics / Mathematical Economics / Statistics & Informatics / Applied Statistics ஆகியவற்றில் 55 % மதிப்பெண்கள் ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு 50 % மதிப்பெண்கள் ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் , எஸ்சி / எஸ்டியினருக்கு 5 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும் . ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் . சென்னை , கோவை , ஈரோடு , மதுரை , விருதுநகர் , சேலம் , நாமக்கல் , திருச்சி , திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும் . 

கட்டணம் : பொது / ஓபிசி / பொருளாதார பிற்பட்டோர் ஆகியோருக்கு 1850 / ( எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகளுக்கு ₹ 100 ) , விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.2.2021 .

No comments:

Post a Comment